×

இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பு: ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வில் தகவல்..!

சென்னை: இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐ.சி.எம்.ஆர்ரின் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் நாட்டில் புற்றுநோய் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் இந்தியா முழுவதும் சுமார் 14 லட்சத்து 61ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆண்கள் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கபடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நாடு முழுவதும் 67 ஆண்டுகளில், ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய்  ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் 29 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு லிம்போபிலாசுடிக் லுகேமியா எனப்படும் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய் அதிகம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 39 வயது வரையிலான ஆண்களுக்கு வாய், நாக்கு, மூளைபுற்றுநோய் அதிகம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய், தைராய்டு, கருப்பை வாய்ப்புற்றுநோய் அதிகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 64 வயத்துக்குட்பட்டவர்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் அண்டை ஒப்பிடும் போது 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதிப்பை தொடக்கத்திலேயே அறிந்துவிட்டாலோ நோய் வருவதற்கான அறிகுறியை முன்பே கண்டுபிடித்துவிட்டாலோ அதனை குணப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். …

The post இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பு: ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வில் தகவல்..! appeared first on Dinakaran.

Tags : ICMR ,CHENNAI ,India ,Dinakaran ,
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...