×

தெ.தேசம்-ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் மோதல்; கட்சி அலுவலகம், வீடுகள் தீ வைத்து எரிப்பு: 144 தடை உத்தரவு அமல்

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ‘இதி ஏமி கர்மா ராஷ்டிரம்’ எனும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரிங் ரோட்டில் வீதிவீதியாக சென்று, ‘ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின்தங்கியதாகவும், எந்தவித வளர்ச்சியும் இல்லை’ என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். உடனே ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்த கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கினர். இதனால் அந்த இடம் களேபரமானது. இந்த சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைத்தனர். இதனையடுத்து தெருமுனை பிரசாரத்தை நிறுத்திவிட்டு கலைந்து செல்லுமாறு தெலுங்குதேசம் கட்சி மச்சர்லா தொகுதி பொறுப்பாளர் ஜூலகந்தி பிரம்மாரெட்டி மற்றும் தொண்டர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, மச்சர்லா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்த 2 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறிது நேரத்தில் ஒய்எஸ்ஆர் தொண்டர்கள் திரண்டு வந்து, தெலுங்குதேசம் கட்சி தொகுதி பொறுப்பாளர் பிரம்மாரெட்டியின் வீடு, அலுவலகத்திற்குள் புகுந்து கற்களால் சரமாரியாக தாக்கி தீ வைத்தனர். கட்சி தொண்டர் ஒருவரின் வீடும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தினர். கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே  தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளரும் சந்திரபாபு மகனுமான நாரா லோகேஷ் கூறுகையில்,  இந்த தாக்குதல் போலீசாரின் ஆதரவுடன் நடந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்….

The post தெ.தேசம்-ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் மோதல்; கட்சி அலுவலகம், வீடுகள் தீ வைத்து எரிப்பு: 144 தடை உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Tags : T. ,Desam-YSR Cong ,Tirumala ,Telugu Desam Party ,Macherla, Balanadu District of Andhra State ,The.Desam-YSR Congress ,
× RELATED கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான்...