×

பாடியநல்லூர் செக்போஸ்டில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: சென்னை நபர் 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்டோ, கார், வேன் மற்றும் லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் கிடைத்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்பி. கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின் படி  இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் பாடியநல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை மடக்கி சோதனை செய்தபோது 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன்  ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தியதாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு, தனசேகரன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர்….

The post பாடியநல்லூர் செக்போஸ்டில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: சென்னை நபர் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Badiyanallur ,Chennai ,Thiruvallur ,Andhra Pradesh ,Padyanallur ,
× RELATED உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து...