புதுடெல்லி: ‘ஒரு நாளைக்கு 69 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளது. நாட்டின் ‘மன்கிபாத்’ என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், இதுபோன்ற தடுப்பூசிகளின் நிலை இருந்திருக்காது,’ என்று பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் வழக்கம் போல் உரையாற்றினார். இதற்கு முன்பாக, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, கொள்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி ‘தடுப்பூசி எங்கே’ என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டர் பதிவை வெளியிட்டார்.அதில் அவர், ‘நாட்டின் ‘மன்கிபாத்’ என்ன என்பதை நீங்கள் (மோடி) புரிந்து கொண்டிருந்தால், இதுபோன்று தடுப்பூசிகளின் நிலை இருந்திருக்காது,’ என பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி மெதுவான வேக விகிதம் மற்றும் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்காத ஊடக அறிக்கைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வீடியோவையும் ராகுல் பகிர்ந்துள்ளார். அதில், ‘வரும் டிசம்பருக்குள் 60 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடுவதை அரசு இலக்காக கொண்டுள்ளது. அதன்டி பார்த்தால், ஒரு நாளைக்கு தேவையான தடுப்பூசி 93 லட்சம். ஆனால், கடந்த 7 நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 36 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. கடந்த 7 நாட்களில் தினசரி 56 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த 24ம் தேதிக்கு முந்தைய 24 மணி நேரத்தில் ஒரு நாளைக்கு 23 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அப்போது தினசரி 69 லட்சம் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்தது,’ என கூறியுள்ளார்….
The post ஒரு நாளைக்கு 69 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை: ராகுல் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.
