×

கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு தரமற்ற முகக்கவசம் வழங்கியது தொடர்பாக விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:  கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 5,300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக பொதுக்குழு உறுப்பினர் தரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், பகுதி கழக செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை மா.அன்பரசன், சைதை சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த ஆட்சியில் நாடா துணியினால் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.  தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை ரூ.5 கோடி வந்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை வரும் புதன்கிழமை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம்  என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இது, தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும்  ஸ்கீரினிங் செய்து அவர்களுக்கு எத்தகைய நோய் இருக்கிறது என்பதை  கண்டுபிடித்து, நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று  மருத்துவம் பார்ப்பதும், இலவசமாக மருந்துகளை வழங்குவதும் இந்த திட்டத்தின்  நோக்கமாகும். இதை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கிறார். …

The post கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு தரமற்ற முகக்கவசம் வழங்கியது தொடர்பாக விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Saitappettai ,Department of People's Welfare ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்