×

பருத்திப்பட்டு கிராமத்தில் 320 பேருக்கு இலவசபட்டா : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கிராமத்தில் 320 வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். ஆவடி மாநகராட்சி, 16வது வார்டு, பருத்திப்பட்டு கிராமத்தில் 1000க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைத்த பிறகு ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு, ஒரு வாரத்தில், அவர் அதிகாரிகளிடம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, ஆவடி தாலுகா அதிகாரிகள் பருத்திப்பட்டு கிராமத்துக்கு சென்று, ஆய்வு செய்தனர்.  இதைதொடர்ந்து, முதல் கட்டமாக 320 வீடுகளுக்கு பட்டா வழங்க முடிவு செய்தனர். இதையொட்டி, பருத்திப்பட்டு கிராமத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், 320 வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.  அப்போது, அவருக்கு கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், திமுக உள்பட  அரசியல் கட்சி பிரமுகர்கள் சால்வை அணித்து பாராட்டினர்.  ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் வில்சன், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர் தா.வின்சென்ட், வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். …

The post பருத்திப்பட்டு கிராமத்தில் 320 பேருக்கு இலவசபட்டா : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Puttipattu Village ,Minister Saw. ,b.k. Nassar ,Awadi ,Minister ,Awadi SW ,Awadi Municipal Corporation ,b.k. ,Nassar ,Pattipattu Village ,Sa. b.k. Nassar ,
× RELATED திருவேற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு...