×

தேர்தல் கமிஷன் கெடுபிடி மாவட்டத்தில் வெறிச்சோடிய வாரச்சந்தைகள்

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கமிஷன் நடத்தி வரும் கெடுபிடி சோதனைகளால், திருவள்ளூர் வாரச்சந்தைகளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தின், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கெடுபிடி சோதனை தொடர்கிறது. கார்கள், அனைத்து தனியார் வாகனங்களும் தேர்தல் அதிகாரிகளின் சோதனைக்கு தப்புவதில்லை.இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் வாரந்தோறும் கூடும் காய்கறி சந்தைக்கு, வெளி மாவட்ட வியாபாரிகள் விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு வருவதும், அதை விற்று பணத்தை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாரச்சந்தைக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகளை கொண்டுவரும் பிற மாவட்ட வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வாரச்சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. மாவட்டத்தில், கிராம புறங்களில் நடந்துவரும் வாரச் சந்தைகளும், வியாபாரிகளின் வருகை குறைவால் களையிழந்து காணப்படுகின்றன. தேர்தல் முடிந்த பிறகே, வாரச் சந்தைகளில் விற்பனை சூடு பிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post தேர்தல் கமிஷன் கெடுபிடி மாவட்டத்தில் வெறிச்சோடிய வாரச்சந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Election ,Commission ,Kedupidi ,Tiruvallur ,Election Commission ,
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...