×

பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என்று மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்’ என்று குறிப்பிட்டுள்ளார்….

The post பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Kamalhaasan ,Chennai ,Rajiv Gandhi ,Kamalhasan ,
× RELATED ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்...