×

இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின்இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி பேசியதில் எந்த தவறும் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றினால், நிபந்தனையற்ற ஆதரவு என்று தெரிவித்துள்ளார். அவர்கள் நிலைபாட்டில் எந்த தவறும் கிடையாது. அனைத்து சமுதாயத்துக்கும் நியாயம் வேண்டும் என விரும்புகிறோம். ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை கைவிட்டுவிட்டது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக இருந்து அவர் கவர்னராக வரவில்லை. அவர் பாதுகாப்பு துறையில் பணியாற்றியவர். அதனால் அவர் பார்வை, பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும். தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து பார்க்க கவர்னருக்கு முழு தகுதி உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

The post இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,. K. ,Stalin ,Tamil Nadu ,M. ,Chairman Anbumani ,
× RELATED எம்.ஜி.ஆர். – நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே: அண்ணாமலை விளக்கம்