×

ஐசிசி மகளிர் உலக கோப்பை இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: ஆதிக்கத்தை தொடர மித்தாலி கோ உறுதி

மவுன்ட் மவுங்கானுயி: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதேயில்லை என்ற வரலாற்று சாதனையை தக்கவைக்கும் முனைப்புடன், இந்திய மகளிர் அணி உலக கோப்பையில் இன்று களமிறங்குகிறது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது.  இன்று நடைபெற உள்ள 3வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான்  அணிகள் மோதுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நிலவும்  சர்ச்சைகளால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுடன் அதிகம் விளையாடியதில்லை.விளையாடிய பெரும்பான்மையான போட்டிகளும்  ஆசிய கோப்பை, உலக கோப்பை ஆட்டங்கள்தான். அவற்றிலும் இந்தியாதான் வென்றுள்ளது. அந்த உற்சாகத்துடன் நடப்பு உலக கோப்பை தொடரில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணி, நியூசி.யுடன் கடைசி  ஒருநாள்,  வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் வென்று தன்னம்பிக்கையுடன் உள்ளது. கேப்டன் மிதாலி, மந்தனா, தீப்தி, ஷபாலி  ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹர்மன்பிரீத் மீண்டும் பார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.இந்தியா உடனான போட்டி பாகிஸ்தானுக்கும் கவுரவ பிரச்னை என்பதால் அந்த அணியும் வெற்றிக்காகப் போராடும்.  பிஸ்மா மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணி  பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து, வங்கதேச அணிகளை வீழ்த்தியுள்ளது. ஆனால், ஒருநாள் உலக கோப்பையில் மட்டுமல்ல, டி20  உலக கோப்பையிலும் இந்தியாவை ஒரு தடவை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. அதனால் இந்தியா இன்று வெற்றிக் கணக்கை எளிதில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.* இரு அணிகளும் கடைசியாக 2017ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தான் விளையாடின. அதில் இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் வென்றது.* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய மகளிர்தான் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதுமட்டுமல்ல 2005 – 2017 வரை நடந்த 10 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாதான் வென்றுள்ளது…..

The post ஐசிசி மகளிர் உலக கோப்பை இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: ஆதிக்கத்தை தொடர மித்தாலி கோ உறுதி appeared first on Dinakaran.

Tags : ICC Women's World Cup ,India ,Pakistan ,Mithali Ko ,Mount ,Maunganui ,women's team ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு