×

உக்ரைன் போர் எதிரொலி மாணவர்களை மீட்க 14 லட்சம் கட்டணம்: தமிழக அரசு செலுத்தியது

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து மீட்க ரூ.60 லட்சம் பயண கட்டணமாக அரசு ஒதுக்கி உள்ளது. ரஷ்யா- உக்ரைன் பேர் காரணமாக அந்நாட்டில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி நேற்று 35 மாணவர்களுக்கு போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் ₹1,7500 டாலர்களை (சுமார் ரூ 14 லட்சம்) தமிழ்நாடு அரசே செலுத்தியது. மேலும் மாணவர்கள், எம்பிக்கள், அதிகாரிகளுக்காக ரூ.1.50 கோடி செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்கு தனி விமானத்தை அமர்த்தி உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பதற்கான சிறப்பு குழு இதில் சிறப்பு தொடர் கவனம் செலுத்தி பணியினை விரைவு படுத்திக் கொண்டிருக்கிறது. இப்பணிக்கு என்று இதுவரையில் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  …

The post உக்ரைன் போர் எதிரொலி மாணவர்களை மீட்க 14 லட்சம் கட்டணம்: தமிழக அரசு செலுத்தியது appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Tamil Nadu government ,Chennai ,Tamilnadu ,Romania, Hungary ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...