×

சித்தூரில் கொரோனா தொற்றை தடுக்க மொபைல் பிசிஆர் பரிசோதனை வாகனம்-எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூரில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மொபைல் பிசிஆர் பரிசோதனை செய்யும் வாகனத்தை எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு தொடங்கி வைத்தார்.சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சித்தூர் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு, நேற்று காஜுர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் மொபைல் வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும் வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.மேலும், கொரோனா வைரஸ் தொற்றால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள். மேலும், மாநிலம் முழுவதும் முதல்வர் ஜெகன்மோகன் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொபைல் பிசிஆர் பரிசோதனை செய்யும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.அதேபோல் சித்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு மொபைல் வாகனத்தை எனது தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மொபைல் வாகனத்தின் மூலம் ஒவ்வொரு வீடாக சென்று செவிலியர்கள் பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று பிசிஆர் பரிசோதனை செய்வார்கள். இதன்காரணமாக நகரப் புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மொபைல் வாகனத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கொள்ளவதால், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.அதேபோல் மாநிலம் முழுவதும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலித்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் சித்தூர் மாவட்ட குழந்தை நல காப்பக அதிகாரி சுதர்சன், ஆர்டிஓ ரேணுகா, எம்ஆர்ஓ விஜயசிம்மா உள்பட ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்….

The post சித்தூரில் கொரோனா தொற்றை தடுக்க மொபைல் பிசிஆர் பரிசோதனை வாகனம்-எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chittoor ,Jangalapalli Srinivasalu ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்