×

படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் காயம்: 8 வாரங்கள் ஓய்வு

ஐதராபாத்: படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் படுகாயம் அடைந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து சண்டை காட்சிகளை படமாக்கி வந்தனர். நேற்று முன்தினம் மாலை சண்டை காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஜூனியர் என்டிஆர் தோளில் பெரிய காயம் ஏற்பட்டது.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் 6 முதல் 8 வாரங்கள் ஜூனியர் என்டிஆர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என நடிகரின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

Tags : Junior NTR ,Hyderabad ,KGF ,Prashanth Neel ,Ramoji Film City ,
× RELATED மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி