×

மேஜிக்காகவே என்னை பார்க்கின்றனர்: ரம்யா ரங்கநாதன் நெகிழ்ச்சி

சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்த ‘அன்பே டயானா’ என்ற பட நன்றி அறிவிப்பு நிகழ்வில் இரா.சரவணன், தயாரிப்பாளர் யுவராஜ், பாரி இளவழகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது ரம்யா ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: ‘மேஜிக்’ என்ற கேரக்டரை என்னை நம்பி ஒப்படைத்த பாரி இளவழகனுக்கு நன்றி. தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

ஒரு நடிகைக்கு தனது பெயரைவிட, தான் நடித்த கேரக்டரின் பெயரால் ரசிகர்கள் அழைப்பதுதான் மிகப்பெரிய அங்கீகாரம். ‘மேஜிக்’ என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சிறுமி ஓடி வந்து, ‘Hi Magic, you really look magical on screen’ என்று சொன்னதும், மற்றொரு குழந்தை ‘Bye Magic’ என்று விடைபெற்றதும் என் மனதில் ஆழமாக நிற்கிறது. மேலும் பலர், ‘நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலோ-இந்திய பெண்ணாக இருந்தும், இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே’ என்று பாராட்டினர். அது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags : Ramya Ranganathan Lainichi ,Chennai ,I. Saravanan ,Yuvaraj ,Pari Ilavazhagan ,Million Dollar Studios ,Neo Castle Creations ,Ramya Ranganathan ,
× RELATED மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி