×
Saravana Stores

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 42 அறிவிப்புகள்

* திருவள்ளூரில் மாம்பழக்கூழ், ஜவ்வரிசி தொழிற்சாலை * கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா * மீஞ்சூர், பொன்னேரியில் புறவழிச் சாலை * திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை சென்னை: திருவள்ளூர் மாவட்டத்திற்கான திட்டங்கள் தொடர்பாக 42 அறிவிப்புகள் கொண்ட தேர்தல்  அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிக்கையில்  கூறியிருப்பதாவது:* திருவள்ளூர், திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர், ஆவடி, கவரப்பேட்டை, பூந்தமல்லியில், நசரத்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.* திருவேற்காடு நகரத்தில் காடுவெட்டி மற்றும் திருவேற்காடு பகுதியை இணைப்பதற்கு கூவம் ஆற்றின் நடுவில் மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் காமராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும்.* மீஞ்சூர், பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.* திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும்.* பொன்னேரியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும்.* சின்னம்மாபேட்டை கால்வாயிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருவேலங்காடு வேதாரண்யேஸ்வரர் கோயில் திருக்குளம் நிரப்பப்படும்.* பட்டறை பெருமாந்தூர், அல்லிக்குழி ஊராட்சிகளில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* திருவாலங்காட்டில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* கடம்பத்தூரில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.* கும்மிடிப்பூண்டியில் ஜவுளிபூங்கா அமைக்கப்படும்.* பள்ளிப்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.* பூந்தமல்லி மற்றும் புட்லூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.* பூந்தமல்லிக்கு வெளியே குப்பை கிடங்கு அமைக்கப்படும். * கும்மிடிப்பூண்டியில் உள்ள குப்பை கிடங்கு ஊருக்கு வெளியே அமைக்கப்படும்.* மெட்ரோ ரயில் சேவை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராமுக்கு விரிவுபடுத்தப்படுவதோடு,  திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர் வழியாக   கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.* பொன்னையாறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.* திருத்தணியில் ஜவுளிபூங்கா அமைக்கப்படும்.* திருத்தணி, பள்ளிப்பட்டில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படும்.* க.மு.பேட்டையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்படும்.* மப்பேடு ஊராட்சியில் சென்னை உலா துறைமுகம் அமைக்கப்படும்.* திருவள்ளூர், பள்ளிப்பட்டு, அரக்கோணத்தில் சுற்று சாலைகள் அமைக்கப்படும்.* திருவள்ளூர் பேருந்து நிலையம் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கட்டப்படும்.* கதிர்வேடு, சோழவரம் ஒன்றியம் மற்றும் கொடுவேலி மாராட்சி கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும்.* ஆவடியில் தகவல் தொழிட்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.* திருவள்ளூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* ஆவடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்.* திருவள்ளூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை, ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கப்படும்.* செம்பரம்பாக்கம், பூந்தமல்லி – வெள்ளவேடு மற்றும் ஆரணியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.* ஆரணியில் மாணவிகளுக்கு தனியாக அரசு விடுதி கட்டப்படும்.* திருமழிசை, பொன்னேரி அரசு மருத்துவமனைகள் நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமளைகளாக தரம் உயர்த்தப்படும்.* விடியங்காடு ஊராட்சியிலும், நல்லூர் பஞ்சாயத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.* கும்மிடிப்பூண்டியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.* ஸ்ரீபெரும்புதூர், கோத்தாப்பேட்டையில் நவீன அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.* திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைத்துத்தரப்படும்.* செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஊர் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.* பெருங்காவூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தாம் உயர்த்தப்படும்.* பாலவேடு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.* கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.*  பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகில் சுற்றுலா தலம் அமைக்கப்படும்.* எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* தண்டலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும்.இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post சட்டமன்ற தேர்தலுக்கான திமுக அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 42 அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Election ,Mangangakulu ,Thiruvallur ,Javarisi ,Factory ,Textile Park ,Gummitipundi ,Meenchur, ,Bonneri ,
× RELATED பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள்:...