தெலுங்கில் சமந்தா தயாரித்து நடித்த ‘மா இண்டி பங்காரம்’ (தமிழில் ‘எங்கள் தங்கம்’) என்ற படம் வெற்றிபெற்று, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. பி.வி.நந்தினி ரெட்டி இயக்கிய அதிரடி ஆக்ஷன் கலந்த ஃபேமிலி சென்டிமெண்ட் படமான இதில் குல்ஷன் தேவய்யா, கவுதமி, ஸ்ரீமுகி, சைதன்யா கிருஷ்ணா நடித்திருந்தனர். தியேட்டர் வெளியீட்டுக்கு பிறகு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.
ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து, ஸ்ட்ரீமிங் சாதனைகளை முறியடித்து வருகிறது. இதற்கு முன்பு சமந்தா, பி.வி.நந்தினி ரெட்டி இணைந்து ‘ஜபர்தஸ்த்’, ‘ஓ பேபி’ ஆகிய தெலுங்கு படங்களை உருவாக்கினர். காதல் அல்லது குடும்பக்கதையாக இல்லாமல், நடுத்தர வர்க்கத்து பெண்ணாக, தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் மிகவும் தைரியமான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
