×

பாலகிருஷ்ணாவுக்கு வில்லியான ஐஸ்வர்யா ராஜேஷ்

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில், ‘படையப்பா’ நீலாம்பரி போன்ற நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட அதிரடி வில்லியாக நடிக்க விரும்புவதாகவும், ‘அப்செஷன்’ போன்ற உளவியல் திரில்லர் கதையில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 111வது படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இதையடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை கொரட்டாலா சிவா இயக்க முடிவாகியுள்ளது.

கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இதில் வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், ஒரு பவர்ஃபுல் வில்லி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் கேரக்டருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கதையில் சில முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Aishwarya Rajesh ,Balakrishna ,Neelambari ,Gopichand Malineni ,Kajal Aggarwal ,Koratala Siva ,Vidya Balan ,
× RELATED மலையாளத்தில் அறிமுகமாகும் மாளவிகா சர்மா