சென்னை: நடிகை திவ்யா கணேசன், ‘சக்க போடு போடு ராஜா’, ‘மதிகெட்டான் சாலை’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ‘ஷ்ஷ்’ என்ற வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக அவர் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த வெப்சீரிஸில் ஹீரோவுடன் படுக்கையறை காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என பல காட்சிகளில் எல்லை மீறி கவர்ச்சி காட்டியிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் கருத்து கூறும்போது, ‘‘ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, சாந்தமான பெண்ணாக, குடும்ப பாங்குள்ள பெண்ணாக வந்த திவ்யாவா இது என வருத்தமாக இருக்கிறது.
இதுபோல், நடிக்க வேண்டிய அவசியம், கதைக்காக தேவைப்பட்டது என மற்ற ஹீரோயின்களைப் போல் இவரும் சொல்லப் போகிறாரா? இதனால் திவ்யா கணேசனின் இமேஜ்தான் பாதிக்கும். அவருக்கு இருந்த நல்ல பெயரை அவராகவே கெடுத்துக் கொண்டிருக்கிறார்’’ என தெரிவித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் பல மொழிகளிலும் வெளியாவதால் இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கதைகளால் வாலிபர்கள் தவறான வழிக்கு செல்கிறார் என சமூக ஆர்வலர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
