சென்னை: தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தில் அறிமுகமான ஸ்ரீலீலா தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ‘ஆஷிக்கி 3’ படத்தில் நடிக்கிறார். சோசியல் மீடியாவில் எந்த ஒரு நடிகரோ, நடிகையோ எனக்கு ஈடாக நடனமாட முடியாது என்று அவர் சொன்னதாக ஒரு செய்தி வைரலானது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் ஸ்ரீலீலா.
அவர் கூறுகையில், ‘‘இது போன்ற தவறான பேச்சை நான் பேசவே இல்லை. நடிப்பு குறித்தோ, நடனம் குறித்தோ ஆணவமான கருத்துக்களை ஒருபோதும் நான் கூற மாட்டேன். இப்படிப்பட்ட சிந்தனைகளை ஊக்குவிக்கும் சூழலில் நான் வளர்க்கப்படவில்லை. என்னுடைய சக கலைஞர்கள் மற்றும் சக நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் இப்படி நான் சொல்லாத விஷயங்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று கண்டித்துள்ளார் ஸ்ரீலீலா.
