×

ஸ்ரீஷீரடி சாய்பாபா விரத வழிபாட்டு கவசம்

நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்கார்மேனி ஐங்கரனே காப்பு1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயிநாதனவன் சிரசைக் காக்கஅருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்நெற்றியினை அமர்ந்து காக்கபொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்வதனமதைப் பொலிந்து காக்கதெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்கண்ணிரண்டும் தினமும் காக்க2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்இரண்டினையும் புகழ்ந்து காக்கசெவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்எந்நாளும் சேர்ந்து காக்கதவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்தலைமயிரைத் தழைந்து காக்கநவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்நாசியினை நயந்து காக்க3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்இருகன்னம் கனிந்து காக்கவிண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்கண்டமதை விரைந்து காக்கபண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்தோளிரண்டும் பரிந்து காக்கமண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்மார்பகத்தை மகிழ்ந்து காக்க4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்வலதுகரம் துணிந்து காக்கநேயமுறும் ஸ்ரீஸாயி நீதனவன்இடதுகரம் நிதமும் காக்கஆயமறை முடிவான ஸாயிபரன்மணிவயிற்றை அறிந்து காக்கதேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்இடுப்பதனைத் தெரிந்து காக்க5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்ஈரைந்தும் குழைந்து காக்கஉரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்பற்களினை உவந்து காக்ககருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்வளர்நாவை களித்துக் காக்கபெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்நெஞ்சமதைப் பெரிதும் காக்க6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்குறியதை எக்காலும் காக்கஇனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்வலக்காலை இனிது காக்கதனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்இடக்காலைத் தாவிக் காக்கபனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்பாதவிரல் பத்தும் காக்க7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்எஞ்ஞான்றும் இறங்கிக் காக்கதிருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயிவானவன்தான் சிறந்து காக்கதருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்இதழ் இரண்டும் தவழ்ந்து காக்கஅருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்அங்கமெலாம் அழகாய்க் காக்க8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்ஸ்ரீஸாயி கடிதிற் காக்கபெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்ஸ்ரீஸாயி பேணிக் காக்கஅரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்ஸ்ரீஸாயி அமைந்து காக்கஉரியவிஷப் பூச்சிகளால் இடரின்றிஸ்ரீஸாயி உடனே காக்க9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்ஸ்ரீஸாயி என்னைக் காக்கபக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்ஸ்ரீஸாயி பாபா காக்கமுத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயிஇராமனவன் முன்னே காக்கசித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்ஸ்ரீஸாயி சித்தன் காக்க….

The post ஸ்ரீஷீரடி சாய்பாபா விரத வழிபாட்டு கவசம் appeared first on Dinakaran.

Tags : Sri Sainathar Kavasam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி