×

மதுராந்தகம் பகுதியில் மீண்டும் கொரோனா; முக கவசம் அணியாவிடில் 200 ரூபாய் அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் மீண்டும் கொரோனா பரவிவருவதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் சார்பில், அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் பிரியாராஜ் ஆலோசனைபடி, ஜமீன் எண்டத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் 6 பேர் சிறப்பு குழு அமைத்து கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்த சிறப்பு குழுவினர் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மதுராந்தகம் நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டர், வணிக வளாகம், பெட்ரோல் பங்க், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு குழுவினர் சோதனை நடத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.‘பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆய்வின்போது அதிகாரிகள் கூறுகையில், ‘’மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்றனர். …

The post மதுராந்தகம் பகுதியில் மீண்டும் கொரோனா; முக கவசம் அணியாவிடில் 200 ரூபாய் அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Maduranam ,Health Department ,Madurandam ,Madhya ,Corona ,
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...