- டி.ஜி. தியாகராஜன்
- செந்தில் தியாகராஜன்
- அர்ஜுன் தியாகராஜன்
- சத்யஜோதி பிலிம்ஸ்
- விக்ரம்
- ஆனந்த் சங்கர்
- எம். எஸ் பாஸ்கர்
- ஊர்வசி
- சம்யுக்தா ஹெக்டே
- ரியா ஷிபு
- விடிவி கணேஷ்
- சுபாஷ் செல்வம்
- விஷ்ணுஜி
சென்னை: டி.ஜி.தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு தற்காலிகமாக ‘சீயான் 63’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘இருமுகன்’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. திட்டமிட்ட காலத்துக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய கேரக்டர்களில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, விடிவி கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணுஜி நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பாளர் பொறுப்பேற்க, ஷான் கருப்புசாமி வசனம் எழுதுகிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி அளிக்க, பிருந்தா நடனக்காட்சிகள் அமைக்கிறார். ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட்டிங் செய்ய, சூர்யா ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். இது பேமிலி ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்படுகிறது.
