×

கொலை மற்றும் பலாத்கார மிரட்டல்கள் வருகிறது: பார்வதி ‘பகீர்’ தகவல்

திருவனந்தபுரம்: கடந்த 2017ல் மலையாள படவுலகில் நடந்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார தாக்குதல் சம்பவத்துக்கு பின்பு, நடிகைகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே துணிச்சலாக பேசி வரும் பார்வதி, தனது 20 ஆண்டு கால திரைப்பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து பேசியுள்ளார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர், தனது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக பல புதுப்பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பார்வதி அளித்த பேட்டியில், ‘எனது வலுவான குரலை ஒடுக்குவதற்காக, சில சக்திகள் இணைந்து என்னை திரையுலகில் இருந்து நீக்க முயற்சித்தன. எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களும், பாலியல் பலாத்கார மிரட்டல்களும் விடுக்கப்பட்டபோது எனது குடும்பத்தினரும், திரையுலக பெண் கலைஞர்கள் கூட்டமைப்பும் எனக்கு பாதுகாப்பாக நின்றனர். என்னை போன்ற செல்வாக்குள்ள நபர் அநீதிக்கு எதிராக குரல் தருவது மிகவும் அவசியம். சில பெரிய படங்களில் இருந்து நான் திட்டமிட்டே விலக்கப்பட்டேன். ஒருவரை நசுக்கி, அதன் மூலம் ஆதாயம் தேடுபவர்களுடன் பணியாற்றுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parvathy ,Pakir ,Thiruvananthapuram ,
× RELATED என்னை ஓரின சேர்க்கையாளர் என்று சொல்வதா? மவுனி ராய் ஆவேசம்