தமிழில் ‘கோமாளி’, ‘வாட்ச்மேன்’, ‘தேள்’ போன்ற படங்களில் நடித்தவர், சம்யுக்தா ஹெக்டே. நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தனது கனவு வாழ்க்கை குறித்து கூறுகையில், ‘கடந்த ஆண்டு இறுதியில் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன். எப்போதுமே நான் கனவு கண்ட வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறேன். பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன்.
மும்பை எனக்கு புதிய வேலை வாய்ப்புகளின் கதவுகளை திறந்துள்ளது. அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறேன். நான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பெண். மற்றவர்களின் எதிர்பார்ப்புக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். நேர்மை மற்றும் விசுவாசத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவேன்’ என்றார்.
