×
Saravana Stores

காவிரியாய் – காலாறாய் – கழியுமாகி

சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித் துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் ‘‘நின்ற திருத்தாண்டகம்’’ ஆகும். இதில் பெருமாள் கங்கையிலும் புனிதமான காவிரியாய் இருப்பது போலவே அதிலிருந்து கால்பிரிந்து ஓடும் வாய்க்காலாகவும் ஒன்றுக்கும் உதவாத கழியுமாகவும் இருக்கின்றான் என்று குறிக்கின்றார்.‘கழி’ என்பது கடல் நீர் நிலப்பகுதிக்குள் தேங்கிநிற்கும் நீர்நிலை. இது பரந்து விரிந்திருந்தாலும் குடிக்கவோ விளைநிலங்களுக்குப் பாய்ச்சவோ பயனாவதில்லை. இது நின்ற இடமும் பயனாவதில்லை. கங்கை போன்ற புனித நீராகப் பெருமான் விளங்குவது போலவே ஒன்றுக்கும் உதவாத நீராகவும் விளங்குகின்றான். இது அவன் அருள் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு பாராட்டுவதில்லை என்பதைக் காட்டுகிறது என்பர். – கிருஷ்ணஜா…

The post காவிரியாய் – காலாறாய் – கழியுமாகி appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Thirunavukkarasar ,Shivaperumal ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை