×

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை

பென்னாகரம்: கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 13ம் தேதி முதல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழையளவு குறைந்ததால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை, கலெக்டர் சாந்தி நீக்கி உத்தரவிட்டார். இருப்பினும் மெயினருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து 15வது நாளாக நீடிக்கிறது. விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 30,475 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. அணையின் நீர்மட்டம், நேற்று 106.48 அடியாக இருந்தது. நீர் இருப்பு 73.47 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery ,Bennagaram ,Karnataka ,Tamil Nadu Cauvery ,Okanagan ,Cauvery ,Paris ,Dinakaran ,
× RELATED மேட்டூருக்கு நீர்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு