- காஜல் அகர்வால்
- நிதீஷ் திவாரி
- ரன்பீர் கபூர்
- ராமர்
- சாய் பல்லவி
- சீதி
- யாஷ்
- இராவணன்
- சன்னி டீல்
- அனுமன்
- மண்டோதரி
- தீபாவளி
- ஏ ஆர் ரஹ்மான்
- ஹான்ஸ் ஜிம்மர்
- ஹாலிவுட்

பல்வேறு மொழிகளில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் படம், ‘ராமாயணா’. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல், மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கும், 2வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட்டை சேர்ந்த ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசை அமைக்கின்றனர்.
இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், ‘இதுவரை நான் பணியாற்றிய படங்களுக்கும், இப்போது ‘ராமாயணா’ படத்தில் பணியாற்றிய அனுபவமும் மிகவும் வித்தியாசமானது. தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு மிகச்சிறந்த படைப்பு. இந்தியா இதுவரை கண்டிராத ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ராமாயணம் இயல்பாகவே ஒரு இந்திய கதை என்பதோடு, எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. இதனால், இப்படத்தின் வெளியீட்டை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

