×

பெத்தி பட வெற்றி விழா: ஜான்வி கபூர் புறக்கணிப்பு

ஐதராபாத்: ராம்சரண் நடித்த ‘பெத்தி’ படத்தை புச்சி பாபு சனா இயக்கினார். இந்த படம் கடந்த 4ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜான்வி கபூரை ஆபாசமாக சித்தரித்திருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ரசிகர்களிடமும் பெண்களிடமும் மன்னிப்பு கேட்ட இயக்குனர் புச்சி பாபு சனா, அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கினார்.

இதற்கிடையே நடிகைகள் கங்கனா ரனவத், டிம்பிள் ஹயாதி, நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் இயக்குனர்களை கடுமையாக சாடினார்கள். இந்த விவகாரத்தால் அப்செட் ஆன ஜான்வி கபூர், ‘பெத்தி’ படத்தினை தனது சோஷியல் மீடியாவில் ப்ரோமோட் செய்வதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் ‘பெத்தி’ படம் உலகளவில் 5 நாளில் ரூ.241 கோடி வசூலித்திருக்கிறது. இதற்கான வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் ராம்சரண், புச்சி பாபு சனா உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவை ஜான்வி கபூர் புறக்கணித்துவிட்டார். ‘பெத்தி’ படத்தில் தனது ஆபாச காட்சிகள், பேசுபொருளாகிவிட்டதால் ஜான்வி கபூர் அசவுகரியமாக உணர்கிறாராம். அதனால்தான் அவர் விழாவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

Tags : Bethi ,Janhvi Kapoor ,Hyderabad ,Ram Charan ,Buchi Babu Sana ,Kangana Ranaut ,Dimple Hayati ,Nithya Menon ,Reema Kallingal ,
× RELATED சந்தாதாரர்களால் கார் வாங்கிய கவர்ச்சி நடிகை