×

ஐஸ் மழை பொழிந்த விஜய் சேதுபதி, சம்யுக்தா

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, துனியா விஜய், சம்யுக்தா, தபு, விடிவி கணேஷ், பிரம்மாஜி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. இப்படம் சம்பந்தமாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சம்யுக்தா, ‘புரி ஜெகன்நாத் ஒரு காட்சியை எளிமையாகவும், ஸ்டைலாகவும் இயக்குவார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளியே கொண்டு வருவார். விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை நான். ரசிகர்கள் அவரது நடிப்பை திரையில் பார்க்கின்றனர். எனக்கு நேரில் பார்க்கக்கூடிய அனுபவம் கிடைத்தது.

படத்தின் கேரக்டருக்கு தகுந்த மாதிரி உடனே மாறிவிடும் மேஜிக் தெரிந்த அவர், மிகவும் அன்பானவர், எளிமையானவர். ‘களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ ஆகிய படங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள நேரடி தமிழ் படம் இது. மலையாளத்தில் இருந்து வந்ததால், தமிழில் சரளமாக பேசுவேன். தயாரிப்பாளர் சார்மி மற்றும் படக்குழுவினர் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பை மறக்க முடியாது’ என்றார். விஜய் சேதுபதி பேசும்போது, சம்யுக்தாவை மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் திறமையான ஒரு நடிகை என்று பாராட்டினார். இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் ஐஸ் மழை பொழிந்ததை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.

Tags : Vijay Sethupathi ,Samyukta ,Puri Jagannath ,India ,Duniya Vijay ,Tabu ,VTV Ganesh ,Brahmaji ,Chennai ,
× RELATED மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி 52...