×

என்ன சொல்கிறது என் ராசி கட்டங்கள்

சனி – சந்திரன்ஜோதிட முரசு மிதுனம் செல்வம்சனி, சந்திரன் சேர்க்கை என்பது ஒரு விசித்திரமான அனுபவங்களை தரும் ஒரு அமைப்பாகும். சனி இருள் கிரகம், மந்தம், ஒரு ராசியை கடக்க 2½ வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. சந்திரன் அதிவேகமான கிரகம். ராசி சக்கரம் 12 ராசிகளை ஒரு மாதத்தில் சுற்றி வந்து விடுகிறது. ஒளிக் கிரகமான சந்திரன் இருள் கிரகமான சனியுடன் சம்பந்தம் என்பது சனி சந்திரன் ஒரே ராசியில் சேர்ந்து இருப்பது அல்லது இருவரும் சம சப்தமமாக பார்ப்பது. அல்லது சனி மட்டும் சந்திரனை பார்ப்பது இருவரும் பரிவர்த்தனை பெறுவது. சனி நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் இருப்பது. சந்திரன் நட்சத்திரமான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் சனி இருப்பது. கடக ராசியில் சனி இருப்பது, அதே போல் மகர ராசி, கும்ப ராசியில் சந்திரன் இருப்பது. இது போன்ற பல அமைப்புக்கள் புனர்பூதோஷம் என்று சொல்லப்படுகிறது.இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லா விஷயங்களுமே எதிர்பாராத விதமாக நடந்து விடும். குறிப்பாக திருமணம் சுணக்கமாகும். அவ்வளவு எளிதில் கூடி வராது. ஆனால் திடீரென்று இரண்டே மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணம்  எல்லாமே முடிந்து விடும். இவர்களுக்கு சந்தேக புத்தி என்பது உடன் பிறந்த ஒன்றாகும். இவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள். அதீத சிந்தனைகள் தோன்றும். திடீரென்று வயோதிகத் தோற்றத்தைப் பெறுவார்கள். கவலை, சிந்தனை ரேகைக் கோடுகள் நெற்றியில் அழுத்தமாக விழும். கண்ணிற்கு கீழே கன்னக் கதுப்புகளில் கருமை படரத் தொடங்கும். இதை கிராமப்புறங்களில் மங்கு என்று சொல்வார்கள். குறிப்பாக சனி, சந்திரன் சம்பந்தம் பெற்று இந்த இருவரின் தசைகளில்தான் அதிக பிரச்னைகள் இருக்கும். மன அமைதியின்மை, தோல் நோய்கள், மூட்டு வலி வீக்கம், டென்ஷன், மறதி, சோர்வு, எரிச்சல் இனம்புரியாத பயம், கவலைகள் எல்லாம் வந்து வாட்டும். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சஞ்சல மனம், சபலபுத்தி அதிகம் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், பிரிவுகள், வழக்குகள் எல்லாம் வருவதற்கு இந்த கிரக சேர்க்கையும் ஒரு முக்கிய காரணமாகும். பல விதமான எண்ண அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். முடிவு செய்ய முடியாமல் திணறுவார்கள், அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். திட சித்தம் என்பது அறவே இருக்காது. இவர்களை வசப்படுத்துவது மிகவும் எளிது. மிகச் சுலபமாக பிறரின் கைப் பாவையாக ஆகி விடுவார்கள். அபூர்வமாக ஒரு சிலருக்கு ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். அது எந்த வயதிலும் வரலாம், திருமணம் ஆனவர்கள் கூட திடீரென்று பக்திமார்க்கத்தில் கலந்து விடுவார்கள், தர்ம சிந்தனை, சேவை மனப்பான்மை உண்டாகும். பிரசித்தி பெற்ற மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மடாதிபதிகளின் ஜாதகங்களில் சனி, சந்திரனின் ஆதிக்கம் உள்ளது என்பது அனுபவ பூர்வமாகத் தெரிகிறது.அங்காரகன் தரும் பூமி காரகம்அங்காரகன் என்ற செவ்வாய்க்கு பூமிக்காரகன் என்ற சிறப்பு அந்தஸ்து ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜோதிட புராண கதைகளின் படி பூமா தேவியால் வளர்க்கப்பட்டதால்  பூமிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அதனால் பூமி காரகன் அங்காரகன் என பழைய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உத்யோகக் காரகன், சகோதரக்காரகன் என்ற அமைப்பும் உள்ளது. ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தில் செவ்வாய், ஆட்சி, உச்சம், வர்கோத்தமம், கேந்திரம், திரிகோணம், சுப கிரக பார்வை, சேர்க்கை, ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் யோக ஆதிபத்தியம் பெற்று நல்ல சாரத்தில் இருந்தால் பூமி புரந்தருளும் சக்கரவர்த்தி யோகம் அமையும். அவரவர் ஜாதக பலம், பூர்வ புண்ணியம், கர்ம வினைக்கு ஏற்ப அளப்பரிய அசையா சொத்துக்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீகமாக, பரம்பரையாக சொத்து சேரும் பாக்கியம் அமையும். மனைவி வந்தவுடன் சொத்து சுகம் சேரும். குழந்தைகள் பிறந்து அவர்கள் வளர வளர மண்ணும், பொன்னும் அமையும். பண்ணை நிலங்கள், காபி, தேயிலை எஸ்டேட் அதிபர்கள், பல நூறு ஏக்கர் வைத்து கரும்பு, நெல் விவசாயம் செய்யும் நிலச்சுவான்தார்கள், மைன்ஸ் என்று சொல்லப்படும் சுரங்க அதிபர்கள், மார்பிள், கிரானைட் போன்ற கற்களை வெட்டி எடுக்கும் குவாரி உரிமையாளர்கள், நிலங்களை வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், பெரிய மால்கள், அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பவர்கள், கணக்கில் அடங்கா வீடுகள், நிலங்கள், தோட்டங்கள், தோப்புக்கள் வைத்திருப்பவர்களின் ஜாதகங்களில் இந்த பூமிகாரகன் அங்காரகன் என்று சொல்லக் கூடிய செவ்வாயின் ஆதிக்கம் நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும். செவ்வாயின் அருள் கடாட்சம் இல்லாமல் பூமி பாக்கிய யோகம் கிடைக்காது. மேலும் பல சுப கிரகங்கள், லக்கினாதிபதி போன்ற அமைப்புக்கள் நன்றாக அமைந்து பலம் பெற்ற செவ்வாயின் தசை ஜாதகருக்கு வரும் போது பிரபல பூமிபாக்கிய யோகம், நாடாளும் யோகம் ஜாதகருக்கு கிடைக்கும். தொட்டது துலங்கும். ஒரு சிலருக்கு செவ்வாய் தசையில் இதைப் போன்ற ராஜயோக அம்சங்களை அனுபவிப்பார்கள்.குருவும் – கேதுவும்நவகிரகங்களின் குருவுக்கும், கேதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குருவின் காரகத்துவங்களாக தனம், புத்திரம், தவம், மந்திர சித்தி, மகான்கள், ஞானம், நிதி, நீதித்துறை என பல அம்சங்கள் உள்ளது. கேதுவின் காரகத்துவங்களாக, பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், சட்டம், மருத்துவ கிரகம், இசை ஞானி, ஆன்மிக தேடல், ஜோதிடம், சாஸ்திர ஞானம் என பல விஷயங்களுக்கு காரகம் வகிப்பவர். குரு – கேது சேர்க்கை என்பது மிகவும் பலமான ஓர் அமைப்பாகும். குரு, கேது இருவரும் பார்வை, சார பரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம். குரு, கேது இருவரும் சாரம், கேது குரு சாரம். எண் கணிதப்படி 3-மற்றும் 7 ஆம் எண் சம்பந்தப்படுவது என ஏதாவது ஒருவகையில் ஜாதகத்தில் குரு, கேது சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் பட்டம், பதவி, புகழ், செல்வாக்கு, கௌரவம் உண்டாகும். குருவும் கேதுவும் சேர்ந்து இருந்து, அந்த குருவுக்கும், கேதுவுக்கும் ஒன்பதாவது இல்லத்தில் புதனும், சுக்கிரனும் இருவரும் இருந்தால் பிரபல ராஜயோகம் உண்டு. புதன், சுக்கிரன் இருவருள் யாராவது ஒருவர் இருந்தால் ஜாதகர் கோடீஸ்வர யோகத்தை அனுபவிப்பார். குரு, கேது இருவரும் நல்ல யோக அம்சத்தில் கூடி இருந்து இந்த இருவரின் தசா புக்திகளில் ஜாதகருக்கு சுப யோக சுப பலன்கள் கூடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை முன் நிறுத்துவார், பக்தி மேலோங்கும். மத போதகர், மதத்தலைவர், கதாகாலட்சேபம், கர்நாடக சங்கீதம், மதச் சொற்பொழிவாளர்கள், ஓதுவார் மூர்த்திகள், மடாதிபதிகள், மகான்களின் ஆசி, தீட்சை பெற்றவர்களாகவும், அறநிலையத்துறை, கோவில்தக்கார், அறங்காவலர்கள் போன்ற பதவிகள் ஏற்கச் செய்வார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் போன்றவற்றை முன்நின்று தலைமை ஏற்று செய்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். பள்ளி, கல்லூரி, தர்மஸ்தாபனம், கட்டளைகள் அமைக்கும் பாக்கியத்தை ஏற்படுத்துவார். ஜோதிடம், சாஸ்திர ஆராய்ச்சி, கணபதி, முருகன் உபாசகர். குறி சொல்லுதல், சித்து விளையாட்டு, சித்த வைத்தியம், மாய மந்திர ஜால வித்தைகளில் நல்ல தேர்ச்சியும், ஞானமும் அருள்வார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, நாடக துறையில் ஜாதகரை முன்னிறுத்துவார். சிறந்த மருத்துவ நிபுணராக ஜாதகரை உண்டாக்குவார்.  குறிப்பாக வயிறு சம்பந்தமான சிகிச்சையில் ஈடுபட வைப்பார்.சுக்கிரன் – சந்திரன் – புதன்ஒரு ஜாதகக் கட்டத்தில் சுக்கிரன், சந்திரன், புதன் மூவரும் சம்பந்தம் உண்டாகும்போது நிறைகுறைகள், யோக அவயோகங்கள் உண்டாகிறது. கிரகச் சேர்க்கைகள், பார்வைகள் மூலம் நன்மைகள் மட்டுமே இருக்காது. பெரிய நன்மை இருந்தால் குறைந்த அளவாவது கெடுபலன்கள் இருக்கும். அந்தந்த லக்கின அமைப்பைப் பொறுத்து பலன்கள் கூடும் குறையும். பொதுவாக ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள், வழக்குகள், நோய்கள், விரயங்கள் எல்லாம் அந்தந்தக் கால கட்டத்தில் நடக்கும் தசா புக்திகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அத்துடன் கோச்சார அமைப்பும் சரியில்லை என்றால் பிரச்னைகளின் தீவிரம் அதிகமாகிறது. சுக்கிரன், சந்திரன், புதன் இந்த மூன்று கிரகங்களுமே மிகமுக்கிய அம்சங்களை இயக்குபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஜாதக கட்டங்களில் அதாவது ராசி கட்டம் அல்லது நவாம்ச கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பது. அதாவது முக்கூட்டு கிரகச் சேர்க்கை அல்லது பார்வை பரிவர்த்தனை, எல்லாம் சம்பந்தம் என்று சொல்லலாம். சுலபமாக சொல்வது என்றால் சந்திரன் புதன் வீட்டில் இருப்பது அல்லது சந்திரன் ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் இருப்பது. சுக்கிரன் புதன் அல்லது சந்திரன் வீட்டில் இருப்பது என அமைப்புகள் இருந்தால் அந்த ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார். எல்லாக் கலைகளும் எளிதில் வசப்படும். பெரிய விஷயங்களை எல்லாம் சாதாரணமாக செய்து முடிப்பார். இயல், இசை, நாடகம், கலைத்துறை, நகைச்சுவை, பேச்சு, சொற்பொழிவு, கணக்கு, சாஸ்திரிய சங்கீதம் போன்றவற்றில் அசாத்திய திறமை இருக்கும். மிகப் பெரிய புகழ், பட்டம், பதவி என உயர்ந்த இடத்திற்கு சென்று விடுவார்கள். அதேநேரத்தில் இந்த கிரகங்கள் எதிர்மறையாக வேலை செய்யவும் வாய்ப்புள்ளது. கூடாநட்பு கேடாய் விளையும் என்பதற்கேற்ப இளம் வயதிலேயே எல்லா தீய பழக்க வழக்கங்களும், துஷ்டர்களின் சேர்க்கையும் எப்படியாவது வந்து பற்றிக் கொள்ளும். இவர்களின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வதே மிக கடினமானதாகும். தங்களின் ஆசைகள், தேவைகள், இச்சைகளை தணித்துக் கொள்ள எவ்வளவு கீழ்த்தரமான செயல்கள் செய்யவும் தயங்க மாட்டார்கள். அளவுக்கு மீறிய போதைப் பழக்கங்கள் காரணமாக நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனச் சிதைவு  ஏற்பட்டு நடைப் பிணங்களாக மாறி விடுவார்கள். காதல், காம போதை வலையில் சிக்கி வாழ்க்கைப் பாதையே மாறிவிடும். அதன் காரணமாக சமூகத்தில் மதிப்பு, மரியாதை இருக்காது. ஒரு சிலருக்கு தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் உண்டாகும். மொத்தத்தில் சஞ்சலம், சபலம், காமம், போதை என நெறி தவறிய வாழ்க்கை அமைந்துவிடும். இதைத் தான் கிரகங்கள் செய்யும். மாயா ஜாலம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. விளையும் புதனும் சூரியனும் விரும்பி ஒன்றில், நான்கில் எட்டில் வளையக்கூடின் மன்னவனாம் என்ற ஜோதிட பரிபாடலுக்கு ஏற்ப ஜாதகர் உயர் கல்வி கற்று உத்யோகத்தில் அமரும் யோகம் உள்ளது. அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிப்பார். எட்டாம் இடத்தில் சூரியன், புதன் இருவரும் சேர்ந்து இருந்தால் 35 வயதிற்கு மேல் திடீர் ராஜ யோகம் உண்டாகும். பெரிய அளவில் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு விடும். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனுசு ராசி எட்டாம் இடமாகும், இந்த தனுசு ராசியில் சூரியன், புதன் இருவரும் சேர்ந்து இருந்தால் அரசியல் தலைவர், M.P., M.L.A மந்திரி என நாடாளும் யோகம் அமையும். ஜாதகக் கட்டத்தில் லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடத்தில் எட்டாம் அதிபதி இருந்தால், அந்த ஜாதகர் இளம் வயதில் படாதபாடு பட்டாலும் 35 வயதிற்குமேல் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத முன்னேற்றம் வந்து விடும்.லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து இருந்தால் ஜாதகரின் தந்தைக்கு நீரில் கண்டம் உண்டாகும். இல்லையென்றால் எப்பொழுதும் நோயாளியாகவே இருப்பார். பெண்கள் ஜாதகத்தில் பாக்கியஸ்தானமெனும் ஒன்பதாம் இடத்தில் நீச கிரகம் இருப்பது தோஷமாகும், மேலும், புதன், சனி இருவரும் இருப்பதும், பார்ப்பதும் நல்ல அமைப்பு கிடையாது. ஏதாவது மனக்குறைகள் இருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. பாக்ய யோகங்கள் இருந்தாலும் காலத்தில் அனுபவிக்க முடியாது. கணவன், மனைவி இடையே இல்லறம் கசக்கும். மறைமுக நோய்கள் மற்றும் ஆண்மைக் குறைவு வந்து நீங்கும்….

The post என்ன சொல்கிறது என் ராசி கட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Saturn ,Murasu Mithunam Selvamsani ,
× RELATED இந்த வார விசேஷங்கள்