
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வரலாற்று கதை கொண்ட படத்துக்கு பிரமாண்டமான செட்டுகள் அமைக்கவும், முன்தயாரிப்பு பணிகளை முடிக்கவும் காலதாமதமாகும் என்பதால், இடையிலுள்ள நேரத்தில் ஒரு படத்தை இயக்கி முடிக்க தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இதையடுத்து மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் படத்துக்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இளையராஜாவுடன் முதல்முறையாக இணையும் மாரி செல்வராஜ், இப்படத்தை தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். அவருடன் ஃபார்ச்சூன் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்நிலையில், படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டைட்டில் ரோலில் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ‘நான் அறிவிக்க ஆவலுடன் காத்திருந்த ஒரு விஷயம் இது. இப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். இந்த புதிய தொடக்கத்தை நினைத்து அதிக உற்சாகம் அடைந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

