×

4 ஆண்டுகளில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து விலகல்: ADR ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தில் காங்கிரசில் இருந்து 170 எம்.எல்.ஏ.க்கள் விலகி இருப்பதாக ADR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி ஒன்றாகும். இக்கட்சியில் கடந்த தொடர்ச்சியாக பல எம்எல்ஏக்கள், அக்கட்சியிலிருந்து விலகுவது, வேறு கட்சிகளுக்கு செல்வது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யார் யார் எந்த கட்சிக்கு சென்றனர் என்பது குறித்து ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; 2016 முதல் 2020-ம் ஆண்டுவரை 405 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். பா.ஜனதாவில் இருந்து 18 பேர் மட்டுமே வெளியேறினர். இப்படி வெளியேறிய எம்.எல்.ஏ.க்களில் 182 பேர் பா.ஜனதாவிலும், 38 பேர் காங்கிரசிலும், 25 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலும் சேர்ந்தனர். இதே காலகட்டத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்த 16 மாநிலங்களவை எம்.பிக்களில் 10 பேர் பாஜக மூலம் வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இதே போல 12 மக்களவை எம்.பிக்களில் 5 பேர் காங்கிரஸ் மூலம் வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இது 2019 தேர்தல் நேரத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறியதால் தான் எனவும் ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post 4 ஆண்டுகளில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து விலகல்: ADR ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : l. PA ,Congress ,Delhi ,ADR ,Dinakaran ,
× RELATED மதச்சார்பின்மை: ஆளுநருக்கு காங்கிரஸ் பதிலடி