×

நிமிஷா சஜயன் படத்துக்கு விருது

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம், ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ளார். முக்கிய வேடங்களில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா சங்​கர், ராஜேந்​திரன் நடித்​துள்ளனர். சமூக, அரசி​யல் பின்​னணி​யுடன் கூடிய ஃபேமிலி திரில்​லர் கதையான இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ்.வி தயாரித்​துள்​ளார். ​

படம் திரைக்கு வரு​வதற்கு முன்பே தாதா​ சாகேப் பால்கே திரைப்பட விழா​வில், சிறந்த திரைக்​கதைக்​கான விருது பெற்​றது. சஜீவ் பழூர் கூறுகையில், ‘ஆழ​மான, யதார்த்​த​மான களத்தில் இருந்து உரு​வான இக்கதை தீவிர​மான, ஆழமான அனுபவத்​தை பார்​வை​யாளர்​களுக்​கு தரும்’ என்​றார்.

Tags : Nimisha Sajayan ,Karunas ,Sajeev Pazhur ,Y.G. Mahendran ,Poornima Bhagyaraj ,Mohan Ram ,Swaminathan ,Kavitalaya Krishnan ,Deepa Shankar ,Rajendran ,Kitesh.V ,Kalamaya Films ,Dadasaheb Phalke Film Festival ,Deep ,
× RELATED மரமல்லியாக மாறிய அதிதி பாலன்