×

கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி டிரெய்லர் வெளியீடு

சென்னை: ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ‘ஓப்பன் ஹெய்மர்’. இதில் அணு ஆயுதத்தை தயாரித்த ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ மூலம் புகழ்பெற்ற சிலியன் மர்பி நடித்தார். இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனை அடுத்து, கிறிஸ்டோபர் நோலன் ‘தி ஒடிஸி’ என்ற தனது 13வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வரும் இப்படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காரணம், உலகின் மிகசிறந்த காவிய கதையாக அறியப்படும் ‘தி ஒடிஸி’ என்ற பல பாகங்கள் கொண்ட நாவலை அடிப்படியாக கொண்டு இப்படம் உருவாது தான். முழுவதும் 70எம்எம் ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட முதல் படம் இதுவாகும். இப்படத்தில் மேட் டாமன், ‘ஸ்பைடர் மேன்’ பட நடிகர் டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் டாம் ஹாலண்டின் காதலி ஜெண்டாயா இணைந்தார்.

பல இயக்குனர்கள் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து தோற்றுப்போன கதையை தற்போது கிரிஸ்டோபர் நோலன் எடுத்துளளார். வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது. அதிரடி சண்டை காட்சி, காதல், எமோஷன் போன்ற அனைத்து விஷயங்களும் இருக்கிறது. தமிழ் உள்பட பல மொழிகளில் டிரெய்லர் வெளிவந்துள்ளது.

 

Tags : Christopher Nolan ,Chennai ,Hollywood ,Cillian Murphy ,Oppenheimer ,
× RELATED நிமிஷா சஜயன் படத்துக்கு விருது