×

மெர்ஸ்……சார்ஸ் கொரோனா

நன்றி குங்குமம் டாக்டர் 1960-ம் ஆண்டிலேயே…கொரோனா வைரஸ் 1960-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இவற்றில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என நான்கு முக்கிய உட்பிரிவுகள் உள்ளது. ஆல்பா, பீட்டா வகை கொரோனா வைரஸ்களை வெளவாலும், காமா, டெல்டா வகை கொரோனா வைரஸ்களை பறவைகளும் அவற்றின் உடலில் பெற்றிருக்கும். அவற்றின் உடலில் பெருகி, மாறுதல்கள் பெற்று பிறகு, அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பெயருக்கு என்ன காரணம்? கொரோனா என்பது லத்தீன், கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதற்கு கிரீடம் அல்லது ஒளிவட்டம் என்று பொருள். எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாக பார்க்கும்போது இந்த வைரஸ்கள் இந்தத் தோற்றத்தில் தெரிவதால் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகின்றன.மெர்ஸ் என்பது… சவுதி அரேபியாவில் ஐக்கிய அரபு நாடுகளில் 2012-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் புதிய வடிவம் எடுத்தது. இந்த புதிய வைரஸ் மெர்ஸ் (MERS-CoV) என்று அழைக்கப்பட்டது. இந்த வைரஸ் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், தென் கொரியாவிற்கும், பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் 2506 பேரை பாதித்து, 862 பேர் வரை உயிரிழக்கக் காரணமாக இருந்தது. பெரும்பாலும் வைரஸ் தொற்றுள்ள அதன் மாமிசத்தை நன்கு சமைக்காமல் சாப்பிட்டவர்களுக்கும், அதன் பாலை காய்ச்சாமல் பருகியவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவும் பீட்டா கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது. இந்த மெர்ஸ் பாதிப்பின் பல்வேறு தொந்தரவுகளும் சார்ஸ் போன்றே இருந்தன. ஆனால், இந்த வைரஸ் சார்ஸ் போல பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நேரடியாக வேகமாக பரவவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிமோனியா ஏற்படவில்லை. மிகவும் நெருக்கமாக ஒரே வீட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே இதன் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் உடல் எதிர்ப்புத் திறன் குன்றியவர்களையே இது பெரிதும் பாதித்தது. சார்ஸ் பாதிப்புஇதன் தொடக்கமும் சீனாதான். சார்ஸ் வைரஸ்(SARS-CoV); 2003-ம் ஆண்டில் சார்ஸ் என்னும் புதிய வைரஸாக உருவெடுத்து 8000 பேரை பாதித்தது. அதில் 774 பேர் இறக்கவும் காரணமாக இருந்தது. பீட்டா கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது. வெளவால்தான் இந்த வகை புதிய வைரஸை சிவெட் வகை (கீரிப்பிள்ளை போன்ற ஓர் இனம்) விலங்குகளுக்கு பரப்பி, அவற்றின் மூலமாகவே மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அதன்பின் சார்ஸ் ஏற்பட்ட மனிதர்கள் தும்முகிறபோதும், இருமுகிறபோதும் காற்றின் மூலமாக மற்றவர்களுக்கு வேகமாக பரவியது. ஆரம்பத்தில் லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வயிற்றோட்டம், அசதியுடன் ஜலதோஷம் போல தொடங்கியது. அதன்பின் அதிக காய்ச்சலை ஏற்படுத்தியது. இதன் மூலம் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு (நிமோனியா பாதித்ததால்) சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்தனர். தற்போதைய வைரஸ்தற்போது உலகெங்கும் மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது ‘நாவல் கொரோனா வைரஸ்’(2019-nCoV). இதுவும் பீட்டா கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் இருமல், தும்மல் மூலமாக காற்றில் பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. நோயாளிகள் பயன்படுத்தும் பொருட்களினாலும் பரவலாம். கண்களின் வழியாகவும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சீனாவில் கர்ப்பிணியிடம் இருந்து பிறந்த குழந்தைக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.கொரோனா பாதிப்பைத் தடுப்பது எப்படி?ஆரம்பத்தில் ஜலதோஷம், காய்ச்சலுடன் தொடங்கி பின், இந்த வைரஸ் பாதிப்பும் நிமோனியாவை ஏற்படுத்தி சுவாச செயலிழப்பை உண்டாக்குகிறது. இது உயிரிழப்பில் கொண்டு போய்விடுகிறது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையும், செயற்கை சுவாசம் செலுத்துவதும்தான் ஒரே வழி. வாய்-நாசி பகுதிகளை மூடிக்கொண்டு இருமுவதையோ, தும்முவதையோ நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று ஏற்பட்டவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது சோப் மூலம் கைகளைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசங்கள் அணிவதன் மூலம் நோய்த்தொற்றை தடுக்கலாம்!தொகுப்பு: க.கதிரவன்

The post மெர்ஸ்……சார்ஸ் கொரோனா appeared first on Dinakaran.

Tags : Saffron Dr. ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...