- பிச்சை
- YouTube
- சென்னை
- சி. மகேந்திரன்
- ஸ்ரீ ஜேகம்
- விப்ஜியார் ஸ்டுடியோஸ்
- ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் அசோக்
- ஸ்ரீஷ்டி எஸ். கவுதம்
- ஜைகிஷன்
- விப்ஜியர்
சென்னை: ‘பிச்சை’ என்கிற பெயரில் ஒரு குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் குறும்படத்தை சி.மகேந்திரன் மற்றும் ஸ்ரீ ஜெகம் இயக்கியுள்ளனர். விப்ஜியார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் அசோக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிருஷ்டி எஸ். கெளதம் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜெய்கிஷன் இசையமைத்துள்ளார்.
‘பிச்சை’ படத்தில் பிரதானமாக வரும் பிச்சைக்காரன் பாத்திரத்தில் நடிகர் விப்ஜியார் நடித்துள்ளார். இவர் 2024 வெளியான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ என்ற சிறுவர்களுக்கான படத்தில் பிரதான வில்லன் வேடம் ஏற்று நடித்தவர். சிங்கம் புலி கதை நாயகனாக நடிக்கும் ‘தீமை அறியா தீக்குச்சி’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது ‘வெற்றி நாயகன்’ உள்ளிட்ட இரண்டு புதிய படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் இந்த படத்தில் அவர் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார்.

