
நாள்தோறும் சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ரைசா வில்சன் கூறுகையில், ‘மாடலிங்கில் இருந்து நடிக்க வந்தபோது பயமும், பதற்றமும் ஏற்பட்டது. நாளடைவில் மாறி, திரைத்துறையை நேசிக்க தொடங்கினேன். என்னை பற்றி கிசுகிசுக்களும், காதல் வதந்திகளும் பரவியது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. ஆனால், உண்மையான காதலுக்காக காத்திருக்கிறேன். மற்ற துறைகளில் இருப்பவர்களை விட, திரைப்பட நடிகைகளை பற்றி கடுமையாக விமர்சிக்கின்றனர். கவர்ச்சியாக உடை அணிபவர்கள் குறித்து தவறாக பேசுவது சரியில்லை.
ரசிகர்களை மகிழ்விக்கவே நடிகைகள் அப்படி செய்கின்றனர். அதை விமர்சிக்காமல் பார்்த்து ரசிக்க வேண்டும். ‘பிகினி’ அணிவது தவறு இல்லை. மாடலிங்கில் இருந்து வந்ததால், பிகினி அணிவது எனக்கு தவறாக தோன்றவில்லை. கதைக்கு ஏற்ப கவர்ச்சியாக நடிப்பேன். ஆனால், நான் வகுத்து வைத்துள்ள எல்லையை எந்நிலையிலும் மீற மாட்டேன்’ என்றார்.

