×

பவன் கல்யாண் உடல்நிலை சிரஞ்சீவி திடீர் விளக்கம்

ஐதராபாத்: ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து தெலுங்கு மெகா ஸ்டாரும், பவன் கல்யாணின் சகோதரருமான சிரஞ்சீவி தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில் சிரஞ்சீவி, ‘மிகவும் வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை முடித்துள்ள கல்யாண் பாபு (பவன் கல்யாண்), தற்போது நல்லபடியாக மீண்டு வருகிறார். மருத்துவர்கள் சொன்ன தகவல்படி, அவர் மீண்டும் வழக்கமான செயல்களுக்கு திரும்ப சுமார் ஒரு வாரமாகும். ஆனால், எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. ரசிகர்களின் அன்புக்கும், அக்கறைக்கும், பிரார்த்தனைக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து அவரை நமது நினைவுகளில் வைத்து, அவருக்கு வலிமை, ஆறுதல் மற்றும் விரைவான குணமடைதலை வேண்டுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chiranjeevi ,Pawan Kalyan ,Hyderabad ,Andhra Pradesh ,Deputy Chief Minister ,Kalyan Babu ,
× RELATED தனுஷ் இயக்கத்தில் மிருணாள்