×

நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா பிரபலங்களில் முதல் ஆளாக வாக்களித்தார். பெல்ஜியமில் இருந்து நேற்றுமுன்தினம் சென்னை திரும்பிய அஜித் நேற்று அதிகாலை 6:45 மணிக்கு திருமான்மியூர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். வாக்களிக்க முழு வெள்ளை நிற கோட் அணிந்து வந்திருந்தார்

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கமல்ஹாசன், அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒன்றாக வந்து வாக்களித்தனர். நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் பெசன்ட் நகரிலுள்ள பள்ளியில் ஓட்டு போட்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வளசரவாக்கத்தில் வாக்களித்தார்.

தொடர்ந்து சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விஷால், சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, விக்ரம் பிரபு, டி.ராஜேந்தர், அர்ஜுன், ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார், சூரி, சந்தானம், ஜீவா, அருண் விஜய், ஆதி, சித்தார்த், பிரசன்னா, சிவகுமார், அரவிந்த் சாமி, கவுதம் ராம் கார்த்திக், கவின், ஜெய், கருணாஸ், கென் கருணாஸ், ஹரிஷ் கல்யாண், சிபிராஜ், மகத் ராகவேந்திரா, பிரதீப் ரங்கநாதன், யோகி பாபு, ஆரவ், நடிகைகள் திரிஷா, சினேகா, கீர்த்தி சுரேஷ்,

ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், நிக்கி கல்ராணி, ரம்யா பாண்டியன், வரலட்சுமி, அதுல்யா ரவி, சாக்‌ஷி அகர்வால், ராதிகா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், இமான், சாம் சி.எஸ்., இயக்குனர்கள் அமீர், பா.ரஞ்சித், சுந்தர்.சி, அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Tags : Chennai ,Tamil Nadu Assembly ,Ajith Kumar ,Ajith ,Belgium ,Thirumanmiyur ,Rajinikanth ,Aishwarya ,Stella Maris School ,Thousand Lights ,Kamal Haasan ,
× RELATED ஹீரோவாக நடிக்கிறேனா?: சாய் அப்யங்கர் பதில்