×

அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா இணையும் பேட்டில்

 

சென்னை: அர்​ஜுன் பிர​பாகரன், ஆராத்யா முதன்மை வேடங்​களில் நடித்​துள்ள‌ திரைப்​படம், ‘பேட்டில்’. சுப்​பிரமணி​யம் சிவா, சரவண சுப்​பை​யா, காயத்​ரி, முனீஷ்​காந்த், உறியடி சுருளி, திஹான், திவ்ய ஸ்ரீ உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்களில் நடித்​துள்​ளனர்.எலைட் டாக்​கீஸ் சார்​பில் கே.​பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படத்தை நாராயணன் பழனி இயக்​கி​யுள்​ளார்.

ஜீவா இசையமைத்​துள்​ளார். யுவ​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இதன் டிரெய்​லர் வரவேற்பை பெற்​றுள்ள நிலை​யில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி படம் வெளி​யாகிறது. படம் பற்றி இயக்​குநர் நாராயணன் பழனி கூறும்​போது, “நல்ல அரசு நாட்​டுக்கு எவ்​வளவு முக்​கியமோ, நல்ல கல்வியும் அவ்​வளவு அவசியமானது. அதை வலி​யுறுத்​தும் படம் தான் இது. தரமான‌ கல்​வியை அனை​வரும் பெறுவதற்கு தடை​யாக உள்ள கல்வி வியா​பாரம் குறித்து படத்தில் பேசியிருக்கிறோம்’’ என்றார்.

Tags : Arjun Prabhakaran ,Aradya ,Chennai ,Subramaniam Shiva ,Saravana Supaiah ,Gayatri ,Munishkant ,Uriyadhi Suruli ,Tihan ,Divya Sri ,K. ,Elite Talkies ,Baskaran ,Narayanan Palani ,Jeeva ,Yuvraj ,
× RELATED கர படத்தில் அரசியல் இருக்கா?