×

கர படத்தில் அரசியல் இருக்கா?

 

சென்னை: தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ பட இயக்​குனர் விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்​ளார். மமிதா பைஜு, கே.எஸ்​.ரவி​கு​மார், ஜெய​ராம், கருணாஸ், சுராஜ் வெஞ்​சரமூடு, பிருத்வி பாண்​டிய​ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏப்​.30-ல் வெளி​யாகும் இப்​படம் பற்றி இயக்​குனர் விக்​னேஷ் ராஜா கூறிய​தாவது:

செல்போன் இல்லாத காலத்தில் 1991-ல் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் நடப்​பது போன்ற கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த கதை இருக்கும். படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் அதுவே முழு படம் கிடையாது. 7 கதா​பாத்​திரங்​களை மையப்​படுத்​திய கதை. ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படத்​தில் எமோஷனல் காட்​சிகள் அதி​கம் இருக்​கும். வன்​முறை காட்​சிகள் இருக்​காது.

மமிதா பைஜு வழக்கமான ஹீரோயினாக இதில் வந்து போகமாட்டார். அவருக்கு வலுவான வேடம் தந்துள்ளேன். சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிகுமார், பிருத்வி பாண்டியராஜன், ஜெயராம் உள்பட எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அவர்களின் லுக்கிலும் மெனக்கெட்டு மாற்றம் செய்திருக்கிறோம். இப்போது போரினால் கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது போல் இதற்கு முன்பும் நடந்துள்ளது. அது படத்தில் சில காட்சிகளில் எதிரொலிக்கும்.

Tags : Chennai ,Dhanush ,Vignesh Raja ,Mamita Baiju ,K.S. Ravikumar ,Jayaram ,Karunas ,Suraj Vencharamudu ,Prithvi Pandiyarajan ,G.V. Prakash Kumar ,Isari Ganesh ,Wales International ,Ramanathapuram district ,
× RELATED அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா இணையும் பேட்டில்