சென்னை: திரைப்பட விமர்சகர்களே படைப்பாளர்களாக மாறும் நிகழ்ச்சி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் பி.லிட் நிறுவனம், ‘பிக் பிட்ச்சர்’ என்ற ரியாலிட்டி ஷோவை அறிமுகப்படுத்துகிறது. ‘இவ்வளவு காலமாக திரைப்படங்களை விமர்சனம் செய்தீர்கள்.
இப்போது ஒரு படத்தை உருவாக்குங்கள்’ என்ற சவாலை நிகழ்ச்சி முன்வைக்கிறது. இதில் பார்வையாளர்களே எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், முக்கிய முடிவுஎடுப்பவர்களாக மாறுகின்றனர். இறுதியில், ‘மக்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்கான படம்’, நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறுதோறும் 60 நிமிட எபிசோடாக 15 வாரங்கள் வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என்.சிம்ஹா, இந்தியில் விஜய் ராஸ், தமிழில் பரத் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
