×

அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவேன்: மிருணாள் தாகூர்

மும்பை: பாலிவுட் முதல் தென்னிந்திய மொழி படங்கள் வரை பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அக்‌ஷய திருதியை நன்னாளை எனக்கு மிகவும் பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறை யாகவும், மிகச் செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதற்கு பின்னால் மறைந்து இருக்கும் அற்புதமான ஒரு விஷயமாகும். இந்த முறை சற்று நிதானமாக செயல்படுவது, எனக்கு உண்மையான மகிழ்ச்சி தரும் விஷயங்களை தேர்ந்துஎடுப்பது என்று உறுதியாக முடிவு செய்துள்ளேன்.

கண்டிப்பாக சிறப்பான ஒன்றை வாங்குவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த ஆண்டு என்னுடைய அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளேன். அன்புக்குரியவர்களு டன் நேரத்தை செலவிடுவது, நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டு வந்த நல்ல விஷயங்களை உடனே தொடங்குவது என்பதுதான் எனக்கு மிகவும் வளமான ஒரு முதலீடாக தெரிகிறது.

Tags : Mrunal Thakur ,Mumbai ,Bollywood ,Akshaya Tritiya ,
× RELATED விமர்சகர்களே படைப்பாளர்களாக மாறும் நிகழ்ச்சி: ஓடிடி தளத்தில் புதுமை