- சென்னை
- சர்வதேச குறும்பட போட்டி
- துபாய்
- பி. சரவணன்
- கணேஷ் மூர்த்தி
- தீபா சங்கர்
- பெஞ்சமின்
- வின்சன்ட் ராய்
- விஜ் ஆசிக்
- பிரதீப் ராஜ்
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘பனையேறி’ குறும்படத்தை தயாரித்த திசையன்விளையை சேர்ந்த டி.பி. சரவணன் மற்றும் இயக்குனர் கணேஷ் மூர்த்தி ஆகியோர், அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தமிழினி’ என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் விஜே ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், ‘ராயல் சல்யூட்’ படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக ‘ரத்னம்’, ‘டீசல்’ படத்தில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் ‘அன்பெனும் ஆயுதம்’ வெப்சீரிஸ் புகழ் புஷ்ப லதா நடித்துள்ளனர்.
மேலும் தயாரிப்பாளர் டி.பி.சரவணனும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தமிழினி’ திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார்.
