- சென்னை
- ஆர். போதிராஜ்
- ஸ்ரீகேங்கா புரொடக்ஷன்ஸ்
- ஆர். வெங்கடராமணன்
- அஸ்வின்
- விக்னேஷ்
- ராஜேஷ்
- யோகேஷ்
- லட்சுமணன்
- ஆதி
- அரிகிருஷ்ணன்
- ஹரி
- பாலாஜி
- ஆகாஷ்
- ஸ்ரீஜித்
- பிரதாப்
- தீபத்மநாபன்
- வெங்கடரமணன்
சென்னை: ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர்.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட்டரமணன், இந்த ‘முதற்கனல்’ படத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை வைத்து படத்தை உருவாக்கியுள்ளார். படம் குறித்து வெங்கட்ட ரமணன் கூறும்போது, ‘‘இன்று நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன. இது பற்றி பேசும் விழிப்புணர்வு படமாக இது அமையும்’’ என்றார். . ஒளிப்பதிவு ; கந்தசாமி கோபால். இசை ; மீராலால்.
