×

ஊராட்சி மன்ற தலைவர் இயக்கி நடித்த படம்

சென்னை: ஆர்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் அழகுமலை எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பருந்து’. ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அழகுமலை. முக்கிய வேடங்களில் வி.ஆர்.விநாயக், மன்சூர் அலிகான், அப்புக்குட்டி, சென்ராயன், பேரரசு, ஆதித்யா, ஷர்மிசா, அமனா, சுமதி, ஷர்மிளா, ஐஸ்வர்யா, மாரிமுத்து நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார்.

வசந்தகுமார் டைரக்‌ஷன் மேற்பார்வை செய்ய, சின்னையா அரங்கம் அமைத்துள்ளார். ஜெயகிருஷ்ணா எடிட்டிங் செய்ய, எஸ்.ஆர்.முருகன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். அசோக் ராஜா நடனக் காட்சி அமைக்க, கங்கை அமரன் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். படம் குறித்து அழகுமலை கூறுகையில், ‘திருமண வயதிலுள்ள ஒரு பெண் காணவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கிடைக்கிறது. விடிவதற்குள் அந்த பெண்ணை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தனது ஆட்களுடன் காரில் கிளம்புகிறார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது’ என்றார்.

Tags : Panchayat ,Chennai ,Azhugamalai ,RR Pictures ,President ,V.R. Vinayak ,Mansoor Ali Khan ,Appukutty ,Senrayan ,Perarasu ,Aditya ,Sharmisa ,Amana ,Sumathi ,Sharmila ,Aishwarya ,Marimuthu ,Kasi Viswanathan ,Jones Rupert ,Vasanthakumar ,Sinnaiya ,Jayakrishna ,S.R. Murugan ,
× RELATED மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி