×

ஏராளமானோர் மாயம்: உத்தரகாண்டில் வெள்ளம் 5 குழந்தைகள் சடலம் மீட்பு

பிதோராகர்க்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். ஏராளாமானோர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிதோராகர்க் மாவட்டத்தில் உள்ள ஜூம்மா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அப்போது வீட்டில் இருந்தவர்களும் அடித்து செல்லப்பட்டனர். காணாமல் போன அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டது. இதில் 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. அதன் பின்னர், மேலும் 2 சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஏராளமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து பிதோராகர்க் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சவுகான் கூறுகையில், “வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய, மாநில  பேரிடர் குழுக்களும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்….

The post ஏராளமானோர் மாயம்: உத்தரகாண்டில் வெள்ளம் 5 குழந்தைகள் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Pithoragarh ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...