×

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா வீராங்கனை அவனி தங்கம் வென்றார். 10 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை அவனி லெகாரா சமன் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான அவனி  லெகாரா தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி:டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப் போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2-வது இடத்தை யோகேஷ் வென்றார். டெல்லியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.பிரதமர் மோடி வாழ்த்து: பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அவனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். துப்பாக்கிச்சுடுதலில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் திறமை காரணமாக வெற்றி கிடைத்துள்ளது என குறிப்பிட்டார். இந்திய விளையாட்டுத் துறையில் இது ஒரு சிறப்பான தருணம் என பிரதமர் மோடி அவனிக்கு புகழராம் செய்தார். …

The post டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Tokyo Paralympics ,India ,Tokyo ,Tokyo Para Olympics ,Avani ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...