- ரன்பீர் கபூர்
- ரேம்
- நிதேஷ் திவாரி
- யாஷ்
- சாய் பல்லவி
- சன்னி டீல்
- காஜல் அகர்வால்
- ரகுல் பிரீத் சிங்
- தீபாவளி
- ஏ ஆர் ரஹ்மான்
- ஹாலிவுட்
- ஹான்ஸ் ஜிம்மர்
- நமித் மல்ஹோத்ரா
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, சன்னி தியோல், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள படம், ‘ராமாயணா’. வரும் தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த தீபாவளிக்கு 2வது பாகமும் பல்வேறு ெமாழிகளில் திரைக்கு வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட்டை சேர்ந்த ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசை அமைத்துள்ளனர். ராமர் வேடத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர் கூறுகையில், ‘நான்கு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா என்னை ராமர் கதாபாத்திரத்துக்காக அணுகியபோது, நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
அதாவது, இந்த வேடத்துக்கு நான் பொருத்தமானவன் கிடையாது என்று நினைத்தேன். என்னால் அந்த கதாபாத்திரத்துக்கு முழுமையான நியாயம் சேர்க்க முடியாது என்று அவரிடம் நான் சொன்னேன். ஆனால், அந்த பயம் விரைவில் நன்றியுணர்வாக மாறியது. ஏனெனில், இதுபோன்ற வாய்ப்பு எனது வாழ்க்கையில் உண்மையிலேயே தேவைப்பட்டது. இந்த கதாபாத்திரத்தின் மீதும், ராமாயண கதையின் மீதும் எனக்கு அளவற்ற அன்பும், மரியாதையும் இருக்கிறது. ராமர் கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து நடித்தேன்’ என்றார். சீதை கேரக்டரில் நடித்துள்ள சாய் பல்லவி, இப்படம் திரைக்கு வந்த பிறகே தனது நடிப்பு அனுபவம் குறித்து பேசுவேன் என்று கறாராக சொல்லிவிட்டார்.
