×

ஹாலிவுட்டுக்கு சென்ற சன்னி லியோன்

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், சில படங்களில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் ஹாலிவுட் வெப்தொடரில் அறிமுகமாகும் தகவல் வெளியாகியுள்ளது. ‘தி ஜெயன்ட்’ என்ற வெப்தொடரை கெவின் பி பிளாத் எழுதி இயக்குகிறார். இதில் சட்ட அமலாக்க அதிகாரி வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதற்கு முன்பு நான் நடித்ததில் இருந்து இது மாறுபட்ட கதையும், கேரக்டரும் கொண்டது என்ற காரணம்தான், இந்த வாய்ப்பை என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது. புதிய கதாபாத்திரத்தை ஆராய்ந்து நடிப்பதும், முற்றிலும் புதிய களத்துக்குள் நுழைவதும் எனக்கு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும். இத்தொடரின் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் பணியாற்றுவதை எவ்வளவு ரசிக்கிறேனோ, அதே அளவுக்கு எனது ரசிகர்களும் இத்தொடரை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags : Sunny Leone ,Hollywood ,Kevin B. Plath ,
× RELATED ராமராக நடிக்க மறுத்த ரன்பீர் கபூர்